ஆப்நகரம்

அரசு விடுமுறை தனியாருக்கு பொருந்தாது: உயர் நீதிமன்றம் விளக்கம்!

மாற்றுமுறை ஆவண சட்டத்தின் கீழ் அரசு அளிக்கும் சிறப்பு விடுமுறைகள் தனியாருக்கு பொருந்தாது என சென்னை உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 18) விளக்கமளித்துள்ளது.

Samayam Tamil 18 Oct 2019, 12:04 pm
அப்துல்கலாம் மறைவை முன்னிட்டு விடுமுறை அளிக்கவில்லை என்று தனியார் நிறுவன தொழிற்சங்கம் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Samayam Tamil Untitled collage (4)


முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் 2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி மறைந்தார். அதை முன்னிட்டு ஜூலை 30ஆம் தேதி தமிழ்நாடு அரசு மாற்று முறை ஆவண சட்டத்தின்படி பொதுவிடுமுறையாக அறிவித்தது.

நீலகிரி.. பள்ளிகளுக்கு லீவு விட்ட கலெக்டர்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஜூலை 30ஆம் தேதி தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் முதல் ஷிப்ட், பொது ஷிப்டுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கியது. மதியம், இரவு ஷிப்டு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கவில்லை.

இதனால் தங்களுக்கும் விடுமுறை வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்காத நிர்வாகம், ஏற்கெனவே 30ஆம் தேதி விடுமுறை அளித்தற்காக ஆகஸ்ட் 8ஆம் தேதி வேலை நாளாக அறிவித்தது.

வரும் திங்கள் கிழமை லீவு: எடப்பாடியே சொல்லிட்டாரு!

இதனை ஏற்காத தொழிற்சங்கத்தினர் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 47 தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டது.

இதை எதிர்த்து தனியார் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையில் விசாரணைக்கு வந்தது.

Diwali Date 2019: தீபாவளி திருநாள் எப்போது?- மகாலட்சுமி பூஜை எப்போது செய்ய வேண்டும்?

அப்போது, மாற்றுமுறை ஆவண சட்டத்தின் படி அரசு அறிவிக்கும் விடுமுறைகள் தனியார் நிறுவனத்துக்கு பொருந்தாது. மனுதாரர் தரப்பு நிறுவனம் நிபந்தனையுடன் விடுமுறையளிக்க முன்வந்தும் அதை ஏற்காத தொழிற்சங்கத்தினருக்கு அன்றைய தினம் ஊதியம் பெற உரிமை இல்லை என்று கூறிய நீதிபதி, சேலம் தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி