ஆப்நகரம்

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5ம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு!

தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Oct 2018, 8:20 pm
தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil tamilnadu


ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன்தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு ஐப்பசி மாதம் 20ம் தேதி (நவம்பர் 6) கொண்டாடப்படுகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியா, மியான்மர், சிங்கப்பூர், பிஜி, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் வெவ்வேறு காரணங்களுக்காக இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை எதிரொலி: சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்!

இந்த நிலையில் தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5ம் தேதியும் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, நவம்பர் 10ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விளக்குகளால் ஒரு கின்னஸ் சாதனை? தீபாவளிக்கு ஒளிரப் போகும் அயோத்தி!

அடுத்த செய்தி