ஆப்நகரம்

அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

விவசாயிகள் கொண்டுவரும் ஒரு நெல்மணி முளைத்து வீண் போனாலும், அதற்கு காரணமான அதிகாரியிடம் பணத்தை வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

Samayam Tamil 15 Oct 2020, 8:15 pm
தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெற்களை உரிய நேரத்தில் விற்று லாபம் பெற விவசாயிகளுக்கு பல்வேறு நெருக்கடிகள் இருந்து வருகின்றன. அதுபோன்ற சிரமங்கள் ஏற்படாதவாறு நெல் கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்தவும் விவாசாயிகள் தொடர் கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர்.
Samayam Tamil file pic


இந்த நிலையில், நெல் கொள்முதல் விவகாரத்தில் விவசாயிகள் தொடர்ச்சியாக சிரமங்களை அனுபவித்து வருவதாகவும், கொள்முதல் நிலையங்களை அரசு விரிவு படுத்தவும், விவசாயிகளின் நலன்களை காத்திடவும்கோரி சென்னையைச் சேர்ந்த சூர்யா பிரகாசம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.

அந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் புகழேந்தி, கிருபாகரன் அமர்வு முன்பு வந்தது. அப்போது, '' நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் பாதுகாக்க அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள் அமர்வு, ''விவசாயிகள் கொண்டுவரும் ஒரு நெல்மணி முளைத்து வீண் போனாலும், அதற்கு காரணமான அதிகாரியிடம் பணத்தை வசூலிக்க வேண்டும். அரசு அதிகாரிகள் ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சமாக அதிகாரிகள் பெறுவது வேதனை அளிப்பதாக தெரிவித்தனர்.

குஷ்பு தனது எதிரிகளைத் தாக்க, எங்களைக் காயப்படுத்துவது சரியில்லை!

''தமிழகத்தில் எத்தனை நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன? விவசாயிகளின் விளை பொருட்களை கொள்முதல் செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சீறிய நீதிபதிகள், இது குறித்து நுகர்பொருள் வாணிப கழக இயக்குநர்உரிய விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

அடுத்த செய்தி