ஆப்நகரம்

ஹேப்பி நியூஸ்: ரேசன் அட்டைக்கு 2500 ரூ - இன்று தொடக்கம்!

பொங்கல் பரிசு திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

Samayam Tamil 21 Dec 2020, 12:02 pm
அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில் இன்று அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil tn pongal gift


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1000 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த முறை 2500 ரூபாய் வழங்கப்படும் என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு மக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பொங்கல் பரிசு என்ற பெயரில் அதிமுக அரசு மக்கள் பணத்தை மக்களுக்கே லஞ்சமாக கொடுக்கிறது என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. மேலும் அனைவருக்கும் இந்த திட்டம் கிடைக்கப் பெற வேண்டும் என்பதற்காகவே சர்க்கரை அட்டைதாரர்களும் அரிசி அட்டைதாரர்களாக மாறலாம் என்ற அறிவிப்பை சமீபத்தில் அரசு வெளியிட்டதாக கூறுகின்றனர்.

ரஜினி சின்னத்தில் என்ன சிக்கல்? வக்கீல்களுடன் அவசர ஆலோசனை!

இந்நிலையில் பொங்கல் பரிசு வழங்குவது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 2.10 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

2500 ரூபாய் ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடத்தும் அவசர ஆலோசனை: என்ன நடக்கிறது பனையூரில்?

இந்தத் திட்டத்துக்காக 5 ஆயிரத்து 604 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.2500 ரூபாயுடன் சிறப்பு தொகுப்பு வழங்கும் பொங்கல் பரிசு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

அடுத்த செய்தி