ஆப்நகரம்

தனியார் பள்ளிக்கு நிகராக மாறிய அரசுப்பள்ளி: அசந்து போன கிராம மக்கள்!

சேலம் மாவட்டம், குரல்நத்தம் கிராமத்தில் இயங்கும் அரசு தொடக்கப்பள்ளியை, அப்பள்ளியின் ஆசிரியர் தெய்வநாயகம் என்பவர் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றியுள்ளார்.

Samayam Tamil 10 Jul 2018, 12:57 pm
சேலம் மாவட்டம், குரல்நத்தம் கிராமத்தில் இயங்கும் அரசு தொடக்கப்பள்ளியை, அப்பள்ளியின் ஆசிரியர் தெய்வநாயகம் என்பவர் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றியுள்ளார்.
Samayam Tamil salem
தனியார் பள்ளிக்கு நிகராக மாறிய அரசுப்பள்ளி: அசந்து போன கிராம மக்கள்!


சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட குரல்நத்தம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. 1955 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் பெற்றொர்கள் தங்கள் குழந்தைகளை அருகிலுள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்து வந்தனர்.

இந்த நிலையில்தான் இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் தெய்வநாயகம் என்பவர் தனியார் பள்ளிக்கு நிகராக, இப்பள்ளியை மாற்றியுள்ளார். பள்ளியில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி என அனைத்தையும் ஏற்படுத்தி மாணவர்களுக்கு சிறப்பான கல்வியைக் கொடுக்க முடிவு செய்தார்.

இவரது இந்த சீரிய முயற்சியால், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க திட்டமிட்டிருந்த பெற்றோர்கள் கூட, இப்பள்ளியை பற்றி கேள்விப்பட்டு, இங்கே சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் 50 மாணவர்களுக்கும் குறைவானவர்கள் மட்டுமே பயின்று வந்த இப்பள்ளியில் தற்போது 127 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் முறை தான். ஆடியும், பாடியும் இவர்கள் பாடம் எடுக்கும் முறை மாணவ, மாணவிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் பள்ளி சிறப்பாக செயல்படுவதை ஊக்குவிக்கும் வகையில், பள்ளிக்கு தேவைப்படும் பீரோ, நாற்காலி, புத்தகங்கள் உள்ளிட்டவற்றை பெற்றோர்கள் சீர் வரிசையாக வழங்கி வருகின்றனர். அவ்வப்போது ஆசிரியர்களுக்கு விழா நடத்தியும் கௌரவப்படுத்துகிறார்கள்.

அடுத்த செய்தி