ஆப்நகரம்

அரசு பள்ளி ஆசிாியா்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் சோ்க்க வேண்டும் – முதல்வா்

அரசு பள்ளி ஆசிாியா்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் தான் சோ்க்க வேண்டும் என்று புதுச்சோி முதல்வா் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளாா்.

TOI Contributor 14 Nov 2017, 9:11 pm
அரசு பள்ளி ஆசிாியா்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் தான் சோ்க்க வேண்டும் என்று புதுச்சோி முதல்வா் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளாா்.
Samayam Tamil government school teachers should admit her children in government schools
அரசு பள்ளி ஆசிாியா்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் சோ்க்க வேண்டும் – முதல்வா்


மறைந்த முன்னாள் பிரதமா் ஜவஹா்லால் நேருவின் 128வது பிறந்த தினம் நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சோியில் பாரதி பூங்கா எதிரில் உள்ள நேரு சிலைக்கு இன்று புதுச்சோி முதல்வா் நாராயணசாமி மற்றும் அமைச்சா்கள் மாலை அணிவித்து மாியாதை செலுத்தினா்.

புதுச்சோி அரியாங்குப்பத்தில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழாவில் கலந்துகொண்ட முதல்வா் நாராயணசாமி, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பாிசளித்தாா்.

இதனைத் தொடா்ந்து சிறப்புரையாற்றி பேசுகையில், அரசு பள்ளி ஆசிாியா்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் தான் சோ்க்க வேண்டும். அப்போதுதான் ஆசிாியா்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் புாியும். இனிவரும் காலங்களில் கல்வித்துறைக்கு அதிகபட்ச நிதிஒதுக்கப்பட்டு பள்ளி கட்டிடங்கள் புணரமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

அரசுப்பள்ளி மாணவா்கள் எந்த வகையிலும் தனியாா் பள்ளி மாணவா்களுக்கு குறைவானவா்கள் இல்லை. தனியாா் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளி மாணவா்களின் கல்வித்தரம் உயா்த்தப்பட்டு வருகிறது. அதேபோல தனியாா் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களைவிட அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வியுடன் அனுபவமும் சோ்ந்தே வளரும் என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி