ஆப்நகரம்

அதிக கட்டணம் வசூலித்தால் 6 மாதம் சிறை: ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அரசு எச்சரிக்கை

ழுழு ஊரடங்கை அடுத்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Samayam Tamil 8 May 2021, 6:55 pm
தமிழ்நாட்டில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வரும் 10ம் தேய் முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள இரவு நேர ஊரடங்குடன் சேர்த்து கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, 10ம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் மாற்றம் மாவட்டங்களுக்கிடையேயான தனியார், அரசு பேருந்து போக்குவரத்து மற்றும் வாடகை டாக்சி, ஆட்டோக்கள் ஆகியவற்றிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil file pic


அதனை தொடர்ந்து அணைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவையின்றி பிற காரணங்களுக்கு பொதுமக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுளள்து.

ஆகையால் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு இன்று மற்றும் நாளை 24 மணிநேர பேருந்து சேவையை தமிழக அரசு அறிவித்துளளது. மேலும், பயணிகள் தேவைக்கேற்ப சிறப்பு பேரூந்துகளையும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர தேவையை சாதகமாக்கிக்கொண்டு தனியார் பேருந்துகளில் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது.


ஏற்கனவே சில தனியார் பேருந்துகளில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் அதுகுறித்த ஸ்கிரீன்ஷாட்டுகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டும் வருகின்றனர். இந்நிலையில், முழு ஊரடங்கை அடுத்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.

தமிழக அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு... முழு விவரம் இதோ..!

அவ்வாறு வசூலித்தால் ரூ.10,000 அபராதம், ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு தமிழக போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் போக்குவரத்து துறை அமைச்சராக திமுக அமைச்சரவையில் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் பதவியேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி