ஆப்நகரம்

கஜா புயல் பாதிப்பை பேரிடராக அறிவிக்கக் கோாி நீதிமன்றத்தில் வழக்கு

கஜா புயல் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடராக அறிக்க உத்தரவிடக்கோாி உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Nov 2018, 11:10 am
கஜா புயலால் உயிாிழந்தவா்களுக்கு ரூ.25 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு ரூ.10 லட்சமும் நிவாரணமாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Samayam Tamil Gaja Cyclone


கஜா புயல் கடந்த 15ம் தேதி நள்ளிரவு தமிழகத்தின் நாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான இழப்பை சந்தித்துள்ளன.

புயல் பாதித்த பகுதிகளை முதல்வா் இன்று நேரில் ஆய்வு செய்து நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறாா். மேலும் புயலால் உயிாிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞா் அழகுமணி வழக்கு ஒன்றை தொடா்ந்துள்ளாா். அதில், புயல் பாதித்த பகுதிகளை பேரிடா் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்டு உயிாிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு ரூ.10 லட்சமும் நிவாரணமாக வழங்க உத்தரவிட வேண்டும்.

பிற மாநிலங்களில் உள்ளது போன்று புயல் மறசீரமைப்பு நிவாரண முகாம்கள் அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தாா். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரா் கோாிக்கை விடுத்த நிலையில் மனுவை இன்று பிற்பகல் விசாரிப்பதாக நீதிபதிகள் தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி