ஆப்நகரம்

சென்னையில் கொரோனா அச்சம்: 3,000 வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படும்!!

சென்னையில் மட்டும் 3,000 வீடுகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Samayam Tamil 23 Mar 2020, 2:17 pm
சென்னையில் கண்காணிக்கப்படும் 3,000 வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Samayam Tamil கொரோனா நோட்டீஸ்


தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பை தவிர்க்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, 2,05,396 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 9,424 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 2,069 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது 54 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 443 பேரின் மாதிரிகள் சோதிக்கப்பட்டதில், 352 நெகடிவ் ஆகவும், 7 பாசிடிவ் ஆக இருப்பதாகவும், ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்து இருந்தார்.

பெரும்பாலும் வெளிநாடுகளில் தமிழகத்துக்கு வந்தவர்களுக்குத்தான் கொரோனா தொற்று உள்ளது. இவர்கள் வீட்டை விட்டு வெளியே அசாதரணமாக நடமாடுவதைத் தவிர்க்கும் வகையில், அவர்களது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்படும் என்று இன்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

கொரோனா பயத்தில் மருந்து சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்

இதன் மூலம் அந்த வீடுகளின் வழியே செல்பவர்கள், அந்த வீட்டிற்குள் தெரியாமல் யாராவது நுழைவதை தடுக்க இந்த நோட்டீஸ் உதவும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த மூவாயிரம் பேரும் சென்னை மாநராட்சி எல்லைக்குள் உள்ளனர்.

நாங்களும் பணம் தருவோம்... கார்ப்பரேட்டுகள் அறிவிப்பு!

இதற்கான நோட்டீசும் தயாரிக்கப்பட்டுள்ளது. எங்கிருந்து, எங்கு வந்தவர்கள், அவர்களது பெயர், முகவரி, எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் போன்ற விவரங்கள் அந்த நோட்டீசில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் அவர்களது வீட்டில் ஒட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறி: அமைச்சர் விடுத்த எச்சரிக்கை!

அடுத்த செய்தி