ஆப்நகரம்

ஆளுநர் நடவடிக்கை எடுக்க் கோரி, ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் மனு

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் ஈ.பி.எஸ்க்கு, ஆளுநர் உத்தரவிடக் கோரி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

TNN 12 Sep 2017, 1:45 pm
அதிமுக அணியின் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றத்தைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் ஈ.பி.எஸ்க்கு, ஆளுநர் உத்தரவிடக் கோரி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார
Samayam Tamil governor take the action to eps government stalin appeals to highcourt
ஆளுநர் நடவடிக்கை எடுக்க் கோரி, ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் மனு


அதிமுகவின் ஈ.பி.எஸ், ஒ.பி.எஸ் அணியின் இணைப்புக்கு பிறகு, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் முதல்வர் பழனிச்சாமிக்கு அளித்து வந்த வாபஸை ரத்து செய்வதாக கூறினர். இந்த நிலையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் தற்போதைய அதிமுக ஆட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் முறையிட்டனர்.



இதுத் தொடர்பாக கடந்த 10ஆம் தேதி ஆளுநரை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் முறையிட்டார். ஆனால், ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் ஈ.பி.எஸ்க்கு, ஆளுநர் உத்தரவிடக் கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார்.

பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் முதல்வர் எடப்பாடியின் அரசு பதவி விலக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Governor take the action to eps government- stalin appeals to highcourt

அடுத்த செய்தி