ஆப்நகரம்

தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு; இது பொங்கல் பண்டிகை ஸ்பெஷல்!

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 8 Dec 2020, 2:28 pm
கோவிட்-19 பாதிப்பு காரணமாக நடப்பாண்டு முழுவதும் தடுப்பு நடவடிக்கையை சுற்றியே காலம் போய்விட்டது. பலரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வர முயற்சித்து வருகின்றனர். கட்டாயமாக முகக்கவசம் அணிதல், போதிய சமூக இடைவெளியை கடைபிடித்தல் என இயல்பு வாழ்க்கையே மாறி போய்விட்டது. வரும் 2021ஆம் ஆண்டாவது ஆறுதலாக இருக்குமா என்று மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். வெளியூர் பயணங்களை பலரும் தவிர்த்து வருவதால் பேருந்துகள், சிறப்பு ரயில்களில் கூட்டமின்றி காணப்படுகிறது. இந்த சூழலில் வரும் ஜனவரி 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை சிறப்பு விடுமுறை வருகிறது. இதையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப திட்டமிடுவர். இதற்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் பொங்கலை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதற்கான முன்பதிவு தொடங்கியிருப்பதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil Pongal Special Bus


இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு, சொகுசு பேருந்துகளுக்கு பொங்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கியிருக்கிறது. இதற்கான முன்பதிவு மையங்களில் அல்லது www.tnstc.in என்ற இணையதளத்தில் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி; சம்பளத்தை அதிரடியாக குறைக்க உத்தரவு!

பயணிகளின் தேவைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக விரைவில் ஆலோசனை கூட்டம் நடைபெறும். அதில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஏற்ப அடுத்தகட்டமாக நடவடிக்கைகள் இருக்கும். சிறப்பு பேருந்துகள் குறித்து ஜனவரி முதல் வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என்று தெரிவித்தனர். தனியார் இணையதளங்கள் மூலமும் பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த சூழலில் பல்வேறு மொபைல் ஆப்கள் மற்றும் இணையதளங்கள் டிக்கெட் முன்பதிவில் சிறப்பு தள்ளுபடி அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளன. எனவே இதனை பொதுமக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி