ஆப்நகரம்

செவிசாய்க்காத அரசுகள்! நெடுவாசலில் 154; கதிராமங்கலத்தில் 116வது நாளாக தொடரும் போராட்டம்

நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாத நிலை நீடித்து வருகிறது.

TNN 13 Sep 2017, 11:29 am
புதுக்கோட்டை: நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாத நிலை நீடித்து வருகிறது.
Samayam Tamil govt doesnt care about neduvasal kathiramangalam protest
செவிசாய்க்காத அரசுகள்! நெடுவாசலில் 154; கதிராமங்கலத்தில் 116வது நாளாக தொடரும் போராட்டம்


புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹட்ரோ கார்பன் எடுக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்காக ஒன்றுகூடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்கட்டமாக நெடுவாசல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இரவு, பகல் பாராமல் 154வது நாளைப் போராட்டம் எட்டியுள்ளது. இதேபோல் தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் போராட்டம் 116வது நாளை எட்டியுள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிப்பதாக போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

கதிராமங்கலம் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 10 பேரை விடுவிக்க வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்திலும் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் மாவட்ட ஆட்சியரின் பேச்சுவார்த்தை அழைப்பையும் போராட்டத்தில் ஈடுபடுவோர் புறக்கணித்தனர்.

Govt doesn't care about Neduvasal, Kathiramangalam Protest.

அடுத்த செய்தி