ஆப்நகரம்

அடுத்ததாக வேலூர் மாவட்டத்தைப் பிரிக்க திட்டம்: அமைச்சர் வீரமணி!

வேலூர்: தமிழக அரசின் அடுத்த திட்டம் குறித்து அமைச்சர் வீரமணி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 9 Jan 2019, 1:07 pm
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் சென்னை - ஒசூர், வேலூர் - திருச்சி, வேலூர் - ஈரோடு, ஆம்பூர் - அம்பத்தூர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் 8 புதிய அரசு பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டன.
Samayam Tamil Veeramani


இதனை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் வீரமணி துவங்கி வைத்தார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் ராமன், வேலூர் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வீரமணி, நேற்று ரூ.140 கோடி மதிப்பிலான 555 புதிய அரசுப் பேருந்துகளை மக்கள் சேவைக்காக தமிழக முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, இந்த மாவட்டத்தை பிரிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இதனை இரண்டாகவோ அல்லது மூன்றாகவோ பிரிப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

விரைவில் வேலூர் மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

அடுத்த செய்தி