ஆப்நகரம்

"ஜி.எஸ்.டி வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு" : தமிழகம் முழுவதும் இன்று ஹோட்டல்கள் அடைப்பு..!

ஹோட்டல்கள் மீது ஜி.எஸ்.டி வரிவிதிப்பை அமல்படுத்துவதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ஹோட்டல் உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

TNN 30 May 2017, 11:54 am
ஹோட்டல்கள் மீது ஜி.எஸ்.டி வரிவிதிப்பை அமல்படுத்துவதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ஹோட்டல் உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil gst taxation south indian hotels strike today
"ஜி.எஸ்.டி வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு" : தமிழகம் முழுவதும் இன்று ஹோட்டல்கள் அடைப்பு..!


ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மட்டும் சேவை வரிவிதிப்பின் காரணமாக ஹோட்டலில் விற்கப்படும் உணவுகளின் விலை அதிகரிக்கும் என ஹோட்டல் உரிமையாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாளை மறுநாள் (ஜுன் 1)முதல் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் விதத்தில், தென்னிந்தியா முழுவதும் இன்று உணவகங்கள் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றன. தமிழகத்தில் மட்டும் சுமார் 1.50 லட்சம் உணவகங்கள், இந்த கடையடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.
இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான பெரிய உணவகங்கள் மூடப்பட்டிருந்தன.

சாலையோரத்தில் செயல்படும் சிறிய உணவகங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. கடையடைப்பு காரணமாக திறக்கப்பட்டிருக்கும் சிறிய உணவகங்கள் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

ஜுன் 3-ஆம் தேதிக்குள் ஜி.எஸ்.டி வரி விதிப்பு குறித்து மத்திய அரசு தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனில் காலைவரையின்றி முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

GST taxation: South Indian Hotels strike today

அடுத்த செய்தி