ஆப்நகரம்

குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களை தகாத வார்த்தையில் பேசிய அதிகாரிகள்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி அலுவலக வளாகத்தில், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2000 ரூபாய் கொடுப்பதறகான படிவத்தை வாங்க நகராட்சி ஊழியர்கள் மறுத்ததால் பரபரப்பு நிலவியது.

Samayam Tamil 3 Mar 2019, 12:36 pm
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி அலுவலக வளாகத்தில், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2000 ரூபாய் கொடுப்பதறகான படிவத்தை வாங்க நகராட்சி ஊழியர்கள் மறுத்ததால் பரபரப்பு நிலவியது.
Samayam Tamil குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களை தகாத வார்த்தையில் பேசிய அதிகாரிகள்!
குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களை தகாத வார்த்தையில் பேசிய அதிகாரிகள்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சியில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2000 ரூபாய் கொடுப்பதறகான படிவத்தை வாங்க நகராட்சி ஊழியர்கள் மறுத்து, நகராட்சி அலுவலகத்ததின் வளாக கேட்டை பூட்டுப் போட்டு பூட்டி உள்ளனர்.

இதனால் படிவத்தை கொடுக்க வந்த பொதுமக்கள் சுமார் 3 மணி நேரம் வெயிலில் காத்திருந்தனர். மேலும் படிவத்தை வாங்கி கொள்ளுமாறு, நகராட்சி ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.ஆனால் ஊழியர்கள் பொதுமக்களை தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தற்போது வந்துள்ள பொதுமக்களிடம் படிவத்தை வாங்குவது என முடிவு செய்து, படிவத்தைப் பெற்றுக் கொண்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதனால் குடியாத்தம் நகராட்சி அலுவலக வளாகத்தில் சுமார் 2 மணிநேரம் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

அடுத்த செய்தி