ஆப்நகரம்

மே 4 முதல் சென்னையில் பேருந்துகள் இயங்கும்... ஆனா இவ்ளோ கட்டுப்பாடுகள்

மே 4ஆம் தேதி முதல் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் இயங்குவதற்கான கட்டுப்பாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

Samayam Tamil 22 Apr 2020, 11:23 am
மே 4ஆம் தேதி முதல் மாநகரப் போக்குவரத்து இயங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், 4ஆம் தேதி முதல் போக்குவரத்து இயங்கும்பட்சத்தில் கடைபிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளை மாநகரப் போக்குவரத்து கழகம், சென்னை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil guidelines for mtc chennai which will be starting operation from may 4
மே 4 முதல் சென்னையில் பேருந்துகள் இயங்கும்... ஆனா இவ்ளோ கட்டுப்பாடுகள்


வழிமுறைகள்:

* வரும் மே 4-ம் தேதி முதல் மாநகர போக்குவரத்து பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பணிக்கு வரவேண்டும்.

* மணிக்கு ஒருமுறை தங்களது கைகளை சோப் போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.

* அரசுப் பேருந்தில் ஏறும் பயணிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அனுமதிக்க கூடாது.


* பஸ்களை இயக்கும்போது, காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறி இருந்தால் அந்த ஊழியர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.

கொரோனா: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாதிப்புகள், தற்போதைய நிலை என்ன?

* பணியில் இருப்பவர் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

* ஆரோக்கிய சேது எனப்படும் செல்போன் ஆப் டவுன்லோட் செய்யப்படவேண்டும்.

* சமூக இடைவெளியை பராமரித்து பயணிகள் பயணிக்க அனுமதிக்க வேண்டும்.

அடுத்த செய்தி