ஆப்நகரம்

கிண்டி பன்னோக்கு மருத்துவமனை: ஜூன் 5இல் திறப்பு - குடியரசு தலைவர் வருகை உறுதி!

கிண்டி பன்னோக்கு மருத்துவமனை ஜூன் 5ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 28 Apr 2023, 1:16 pm
சென்னை கிண்டியில் உருவாகியுள்ள பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 28) நேரில் சென்று அழைத்தார்.
Samayam Tamil mk stalin and india president


நேற்று இரவு டெல்லிக்கு விமானம் மூலம் கிளம்ப இருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் இன்று காலை 6 மணியளவில் விமானம் மூலம் டெல்லி சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஓபிஎஸ்ஸுக்கு அடி மேல் அடி: புதிதாய் சேர்ந்த இன்னொரு வழக்கு!
சென்னை கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை 239 கோடி ரூபாய் செலவில் 7 தளங்களுடன் 1000 படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்தார். இன்று காலை 11.30 மணியளவில் குடியரசு தலைவர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
பாஜக நிர்வாகி படுகொலை: தமிழக அரசுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்!
இதைத் தொடர்ந்து ஜூன் 5ஆம் தேதி திறந்து வைக்க நேரம் குடியரசுத் தலைவர் சம்மதம் தெரிவித்தார். இந்த சந்திப்பு 10 முதல் 15 நிமிடம் வரை நடைபெற்றது. திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு உடன் சென்றதாக கூறப்பட்டது.

ஜூன் 5ஆம் தேதி மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்துகொள்ளும் குடியரசு தலைவர், நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவிலும் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி