ஆப்நகரம்

குட்காவுக்கு தடை நீட்டிப்பு: தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!

குட்கா, பான் மசாலா பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 2 Jun 2020, 11:53 am
தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா பொருள்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தமிழ்நாடு அரசு தடையை நீட்டித்துள்ளது.
Samayam Tamil gutka pan masala banned another one year in tamil nadu


தமிழ்நாட்டில் குட்கா, பான்மசலா மற்றும் புகையிலை பொருட்களை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்படும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2013ஆம் வருடம் ஏப்ரல் 8ஆம் தேதி சட்டசபையில் அறிவித்தார்.
அதே போன்று, மத்திய அரசும், குட்கா பான் மசாலா பொருட்களுக்கு தடை விதிக்க, அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியது.

அதைத் தொடர்ந்து குட்கா பான் மசாலா தடை தொடர்பாக ஆண்டுதோறும் அரசாணை பிறப்பிக்கப்பட்டு வருகிறது.


முடி வெட்டப் போறீங்களா, ஆதார் எடுத்துட்டு போங்க!

ஒவ்வொரு ஆண்டும் தடை நீட்டிக்கப்படுவதற்குப் பதிலாக நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் குரல் எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக பொதுநல வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில் ஒவ்வொரு ஆண்டும் தடையை நீட்டித்து வருகிறது.

அந்தவகையில் மே 23ஆம் தேதி முதல் மேலும் ஒரு ஆண்டுக்கு குட்கா, பான் மசாலாப் பொருள்களுக்கான தடையை தமிழ்நாடு அரசு நீட்டி உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி