ஆப்நகரம்

ரயில்களை கவிழ்க்க முயற்சி.. திருமாவளவன் ஆட்கள் செய்திருக்க மாட்டார்களா? எச். ராஜா கேள்வி

தமிழகத்தில் பல இடங்களில் ரயில் கவிழ்ப்புக்கான முயற்சிகள் நடைபெறும் நிலையில், திருமாவளவனை அதில் சம்பந்தப்படுத்தி பேசியது எச். ராஜா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Authored byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil 7 Jun 2023, 10:14 pm
மதுரை: தமிழகத்தில் பல இடங்களில் ரயில் கவிழ்ப்பு முயற்சிகள் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டி பேசிய பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை இதில் சம்பந்தப்படுத்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil h raja tiruma


மதுரையில் பாஜக நிர்வாகிகளை சந்தித்து பேசிய எச். ராஜா, அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என சிலர் வலியுறுத்துகிறார்களே என நிருபர் ஒருவர் கேள்வியெழுப்பினார். இதனால் ஆவேசமடைந்து எச். ராஜா பேசியதாவது:

22 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனதற்கு தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்று கேட்காத எந்த வாயும் பிரதமரை பற்றி பேசக்கூடாது. டாஸ்மாக்கிலேயே கள்ளச்சாராயம் விற்கிறதா குற்றச்சாட்டு இருக்கிறது. தஞ்சாவூரில் 2 பேர் டாஸ்மாக்கில் மது அருந்தி இறந்தார்களா இல்லையா? தமிழகத்தில் அப்படியொரு மோசமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

திருச்சியில் உள்ள வாளாடியில் ரயிலை கவிழ்க்க முயற்சி நடந்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 11 மாதங்கள்தான் இருக்கிறது. இன்னும் இதுபோன்ற செயல்கள் நிறைய நடக்கும். இந்த செயல்களில் ஈடுபடுவது யார்? நகர்ப்புற நக்சல்கள் (Urban Naxals) தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். திருமாவளவன் மாதிரி இருக்கக்கூடியவர்கள் இதற்காக ஆட்களை அனுப்ப முடியுமா, முடியாதா?

ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்த அடுத்த நாளே பிரதமரும், ரயில்வே அமைச்சரும் அங்கு சென்று நிலைமையை சீராக்கி விட்டார்கள். அங்கு நடந்த சம்பவம் உண்மையிலேயே விபத்தா அல்லது சதிச்செயலா என சிபிஐ விசாரித்து வருகிறது. சதிச்செயலாக இருக்கலாம் என தற்போது செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதுதொடர்பாக முழு விசாரணை நடைபெற்ற பிறகே இந்த விஷயம் குறித்து பேச முடியும். அதற்கு முன்பே நாமே ஒரு முடிவுக்கு வரக் கூடாது. இவ்வாறு எச். ராஜா பேசினார்.
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி