ஆப்நகரம்

சரக்கு மிடுக்கு பேச்சு; எல்லாம் தமிழகத்தின் தலைவிதி - இவரை போய் இப்படி சொல்லிட்டாரே ஹெச்.ராஜா!

தங்கள் கட்சி ஆட்சிக்கு வரக்கூடாதா என்று கேள்வி எழுப்பிய அரசியல் தலைவர் பற்றி பாஜகவின் ஹெச்.ராஜா குறிப்பிட்டுள்ள விஷயங்களை இங்கே காணலாம்.

Samayam Tamil 24 Feb 2020, 12:26 pm
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் ”தேசம் காப்போம்” பேரணி நடைபெற்றது. இதில் அக்கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
Samayam Tamil H RAJA


இதையடுத்து நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் திருமாவளவன், கூலிக்கு மாரடிக்கும் கும்பலாகவும், கோஷம் போடும் கும்பலாகவும் விசிக இருக்கும் என்று கனவு காண வேண்டாம்.

ஒருநாள் கோட்டையில் கொடியேற்றுவோம். முதலமைச்சரைத் தீர்மானிக்கும் சக்தியும், இந்திய அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியும் விசிகவிற்கு இருக்கிறது. 70 வயது வரை அரிதாரம் பூசி நடித்து முடித்தவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வர விரும்பும் போது 30 ஆண்டுகளாக மக்கள் தொண்டாற்றி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆட்சிக்கு வரக்கூடாதா என்று கேள்வி எழுப்பினார்.

சீறிப் பாய்ந்த மாடுகள்; மாஸ் காட்டிய பந்தயம் - புதுக்கோட்டையில் களைகட்டிய திருவிழா!

இதன்மூலம் நடிகர் ரஜினிகாந்தை நேரடியாகவே திருமாவளவன் சீண்டினார். இந்நிலையில் திருமாவளவனை கடுமையாக விமர்சிக்கும் வகையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், இவர் என்ன சாதாரண நபரா? சரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர். டில்லியில் இருந்து கொண்டு தென் மாவட்டங்களை தீ பிடிக்க வைப்பேன் என்று பேசிய மாவீரர். எல்லாம் தமிழகத்தின் தலைவிதி.

சிறுபான்மையினர் என்றால், நாட்டிற்கு எதிராக செயல்பட்டால் வண்ணாரப்பேட்டை உள்பட தமிழகம் முழுவதும் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தலாம். ஆனால் ‌சிஏஏ விற்கு ஆதரவாக போராட்டம் என்றால் காவல்துறை கைது செய்து எஃப்.ஐ.ஆர் போடும்.

தமிழகத்தில் இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களா? வெட்கக்கேடு என்று பதிவிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி தற்போது விவாதப் பொருளாகி இருக்கிறது.

அடுத்த செய்தி