ஆப்நகரம்

அது ஆண்மையுள்ள அரசு -ஹெச். ராஜா ட்விட்!!

கர்நாடக மாநிலத்தில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும், சதுர்த்தியை கொண்டாடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, அதனை ஆண்மையுள்ள அரசு எனக் கூறி, பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 19 Aug 2020, 7:52 pm
தமிழகத்தில் வரும் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி வழக்கம்போல் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவ அனுமதிக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கைவிடுத்தன.
Samayam Tamil h raja


ஆனால், கொரோனாவால் ஏற்பட்டுவரும் பாதிப்புகளை கருத்தில்கொண்டு விநாயகர் சதுர்த்திக்கு சிலைகளை அமைத்து, ஊர்வலம் நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இந்த தடை உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், "மாநிலம் முழுவதும் நாள்தோறும் சராசரியாக ஆறாயிரம் பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுவரும் நிலையில், விநாயகர் சதுர்த்தி ஊர்லலம் அவசியமா" என்று நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

விநாயகர் சதுர்த்திக்கு 1.5லட்சம் சிலைகள் வைக்கப்படும்: நீதிமன்ற எச்சரிக்கையை மதிக்காத இந்து முன்னணி!

இருப்பினும், யார் என்ன சொன்னாலும் மாநிலம் முழுவதும் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் நிறுவப்படும் என்று இந்து அமைப்புகள் பகிரங்கமாக அறிவித்துள்ளன.

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை கொண்டாட கர்நாடக மாநில அரசு அனுமதி அளித்துள்ளதை குறிப்பிட்டு, பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வழக்கம்போல் சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " சென்னையிலும் நேற்றிலிருந்து டாஸ்மாக் திறக்கப்பட்டு விட்டது. இதனால் கொரோனா வராதாம். ஆனால் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து 5-10 பேர் சமூக இடைவெளியோடு விசர்ஜனம் செய்தால் கொரோனா வந்துடுமாம். பகுத்தறிவு. பகுத்தறிவு.

கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு" என்று ஹெச்.ராஜா பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி