ஆப்நகரம்

வெளிநாடு பறக்கும் செல்லூர் ராஜு.. ஓ இது தான் காரணமா?

செல்லூர் ராஜு வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்ல முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 17 Jan 2022, 12:08 pm
பணமோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்ப்போது இடைக்கால ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
Samayam Tamil sellur raju aiadmk


அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில் ராஜேந்திர பாலாஜி பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டது அதிமுகவுக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னர் அதிமுக மாஜிக்கள் சிலருக்கு பயம் தொற்றிக் கொண்டதாக சொல்கிறார்கள்.

திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரனுக்குள் நகை வைத்து கடன்பெற்றவர்களுடைய கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு முழுவதும் 48 லட்சத்து 84 ஆயிரத்து 726 நகைக் கடன்களை பரிசீலித்து, அதில் 35 லட்சத்து 37 ஆயிரத்து 693 நகைக் கடன்கள் தள்ளுபடி பெற தகுதி இல்லாதவைகள் என அறிவிக்கப்பட்டன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எப்போது? நோட் பண்ணிக்கோங்க!
அதாவது நகைக் கடன்களில் 72 சதவீதத்துக்கும் அதிகமாக கடன்கள் தள்ளுபடி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது 48 லட்சத்து 84 ஆயிரத்து 726 நகைக் கடன்களில் 10 லட்சத்து 18 ஆயிரத்து 66 கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுகவும், திமுகவும் கூட்டுறவு நகைக் கடன் அறிவிப்பை மாறி, மாறி அறிவித்ததால் எப்படியும் கடன் தள்ளுபடியாகிவிடும் என்ற எண்ணத்தில் பலர் இதில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நபர் பல வங்கிகளில் கடன் பெற்றிருப்பது, போலி நகைகளை கொடுத்து கடன் பெற்றிருப்பது, நகையே இல்லாமல் கடன் பெற்றிருப்பது என பல விதமான மோசடிகள் அம்பலமாகின.

முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் அப்போது கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த செல்லூர் ராஜு பெயரும் அடிபடுவதாக அக்கட்சி வட்டாரங்களே தெரிவிக்கின்றன. இதனாலே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி அவர் பேசினார் எனவும் கூறுகிறார்கள்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்: தமிழக அரசு அறிவிப்பு!
இந்த சூழலில் குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்துள்ளதாக சொல்கிறார்கள். கொரோனா மூன்றாவது அலை காரணமாக பல்வேறு நாடுகள் சிக்கலைச் சந்தித்துள்ள நிலையில் எந்த நாட்டுக்கு போகலாம் என்பது இன்னும் டிக் அடிக்கப்படவில்லையாம்.

மாஜி மந்திரி சுற்றுலா செல்கிறாரா அல்லது தன் மீது பெரியளவில் புகார் எழுவதற்கு முன்னர் தன்னை தற்காத்துக் கொள்ள பதுங்குகிறாரா என்ற பேச்சு மதுரை மாவட்ட அதிமுக வட்டாரத்திலேயே எழுந்துள்ளது.

அடுத்த செய்தி