ஆப்நகரம்

டுவிட்டரில் டிரெண்டிங் அடித்த கலைஞரின் பிறந்த நாள்!

டுவிட்டரில், கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்த நாளான இன்று #HBDKalaignar94 ஹேஷ் டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

TNN 3 Jun 2017, 10:17 pm
டுவிட்டரில், கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்த நாளான இன்று #HBDKalaignar94 ஹேஷ் டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
Samayam Tamil hbdkalaignar94 tops twitter trending
டுவிட்டரில் டிரெண்டிங் அடித்த கலைஞரின் பிறந்த நாள்!


திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் மற்றும் சட்டப்பேரவை வைர விழாவினை முன்னிட்டு, #HBDKalaignar94 என்ற ஹேஷ் டேகில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள், திமுக தொண்டர்கள், பொதுமக்கள் என பலதரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதனால், வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் தற்போது வரை சமூக வலைதளங்களில் #HBDKalaignar94 ஹேஷ் டேக் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.

பல லட்சக்கணக்கானோர் இந்த ஹேஷ் டேகில், திமுக தலைவர் கருணாநிதிக்கு பிறந்தநாள் மற்றும் சட்டப்பேரவை வைர விழா வாழ்த்து, அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் திமுக ஆட்சிகால சாதனைகள் குறித்த பதிவுகளை ட்வீட் செய்து வருவதால், இன்று #HBDKalaignar94 ஹேஷ் டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்து ட்ரெண்டாகி வருகிறது.

Karunanidhi Birthday: #HBDKalaignar94 tops Twitter trending.

அடுத்த செய்தி