ஆப்நகரம்

ராஜிவ் கொலை வழக்குக் குற்றவாளிக்கு உரிய சிகிச்சை வழங்க உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரனுக்கு, மருத்துவ சிகிச்சை வழங்க தனிக்குழு ஒன்றை ஏற்படுத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

TNN 2 Jun 2016, 6:28 pm
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரனுக்கு, மருத்துவ சிகிச்சை வழங்க தனிக்குழு ஒன்றை ஏற்படுத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Samayam Tamil hc orders constitution of medical board to diagnose ailing rajiv gandhi assassin case convict
ராஜிவ் கொலை வழக்குக் குற்றவாளிக்கு உரிய சிகிச்சை வழங்க உத்தரவு

ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுமீதான விசாரணையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு உடல்நலம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை வழங்காமல் இழுத்தடிப்பு செய்வதாகவும் அவர் கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், கோகுல்தாஸ் அடங்கிய அமர்வு, மருத்துவக் குழு ஒன்றை ஏற்படுத்தி, கைதி ரவிச்சந்திரனுக்கு உரிய சிகிச்சை வழங்கி, குணப்படுத்தும்படி உத்தரவிட்டனர். இதுதொடர்பான செயல் அறிக்கையை வரும் 20ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என, மதுரை மத்திய சிறைச்சாலை நிர்வாகத்தை நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

அடுத்த செய்தி