ஆப்நகரம்

பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் பணியிடமாற்றத்திற்கு தடை: உயர்நீதிமன்றம்...!

பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் பணியிடமாற்றத்திற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 11 Aug 2017, 1:57 pm
சென்னை: பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் பணியிடமாற்றத்திற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil hc orders not to transfer udhayachandran
பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் பணியிடமாற்றத்திற்கு தடை: உயர்நீதிமன்றம்...!


கடந்த மார்ச் மாதம் பள்ளிக்கல்வித் துறை செயலாளராக உதயச்சந்திரன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அந்த துறை பல்வேறு சிறப்பான மாற்றங்களுக்கு உட்பட்டு வருகிறது.

அவற்றுள் பொதுத்தேர்வுகளில் தரவரிசையை ஒழித்தது, 11-ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வை அறிமுகம் செய்தது, பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான குழுக்களை அமைத்தது உள்ளிட்டவை அடங்கும்.

உதயச்சந்திரன் பொறுப்பேற்று 5 மாதங்கள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில், அவரை அத்துறையிலிருந்து இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கு ஆட்சியாளர்களின் ஊழலுக்கு உதயச்சந்திரன் ஒத்துழைக்காததே என்று கூறப்பட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் உதயச்சந்திரன் பணியிடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் பணியிடமாற்றத்திற்கு தடை விதித்தது. பள்ளி பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் குழுவில் உள்ள அதிகாரிகளை மாற்றக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

HC orders not to transfer School Education secretary Udhayachandran.

அடுத்த செய்தி