ஆப்நகரம்

பரோலை ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும்- நளினி வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

நளினி தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 20 Aug 2019, 1:25 pm
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது, மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது மகள் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
Samayam Tamil Nalini Sriharan


எனவே 6 மாதங்கள் பரோல் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Also Read: சிறையில் பிறந்து வளர்ந்த நளினியின் மகள் - உணர்ச்சி பொங்கும் தாயின் நினைவலைகள்!

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் விசாரித்தனர். இதில் வேலூர் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட நளினி, தானே ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நிபந்தனைகளுடன் ஒரு மாதம் மட்டும் பரோல் வழங்கி உத்தரவிடப்பட்டது.

அதன்படி, 30 நாட்கள் பரோலில் கடந்த மாதம் 25ஆம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்தார். பரோல் நாட்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

Also Read: கல்யாணம் எங்க ’லண்டன்’லயா? என்ன செய்யப் போகிறார் பரோலில் வெளியே வந்த நளினி!

இவர் தற்போது வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவையின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சிங்கராயர் வீட்டில் தங்கியுள்ளார்.

இந்த சூழலில் மகளின் திருமண ஏற்பாடுகளை முடிக்க முடியவில்லை என்று கூறி, பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க தமிழக அரசு, சிறைத்துறையிடம் கோரியிருந்தார். ஆனால் அவர்கள் கோரிக்கையை நிராகரித்ததை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்துள்ளார்.

Also Read: மகளின் திருமணத்திற்காக பரோலில் வெளியே வந்தார் நளினி!

இதற்கு தமிழக அரசும், சிறைத்துறையும் பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த செய்தி