ஆப்நகரம்

மசூர் பருப்பு கொள்முதல் செய்ய இடைக்கால தடை!

பொது விநியோகத்திட்டத்திற்கான மசூர் பருப்பை கொள்முதல் செய்யும் டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

TNN 10 Jul 2017, 6:50 pm
பொது விநியோகத்திட்டத்திற்கான மசூர் பருப்பை கொள்முதல் செய்யும் டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil hc restrains tamil nadu civil supplies corporation from procuring masoor dal
மசூர் பருப்பு கொள்முதல் செய்ய இடைக்கால தடை!


தமிழக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையானது ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு விற்பதற்காகவும் மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்காக மசூர் பருப்பை கொள்முதல் செய்யவேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. அரசின் ஆணைக்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நலத்துறையை சேர்ந்த ஓய்வு பெற்ற இணை இயக்குநர் ஆஸ்தி ஜகனாதன் என்பவர் பொது நல வழக்கு ஒன்றை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கானது நீதிபதிகள் கேகே சசிதரன் மற்றும் ஜிஆர் சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மசூர் பருப்பு உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்றும், ஆனாலும் பள்ளிகளில் மதிய உணவிற்கு மசூர் பருப்பு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் ஆஸ்தி ஜகனாதன் தன் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். கரூர் மாவட்ட ஆட்சியர் மசூர் பருப்பின் விஷத்தன்மை குறித்து தெரியவந்ததும், மதிய உணவு திட்டத்தில் மசூர் பருப்பை தேர்க்க கூடாது என தமிழக அரசுக்கு வலியுறுத்தியதாகவும் மனுவில் குறிப்பிட்ட இருந்தார்.

மேலும் சமூக பொதுநலத்துறையானது கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி மதிய உணவு திட்டத்திற்கு மசூர் பருப்பு விநியோகிப்பதற்கு தடை விதித்து இருப்பதையும் தன் மனுவில் குறிப்பிட்டுருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் பொது விநியோ திட்டத்திற்கு மசூர் பருப்பை கொள்முதல் செய்யும் டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி