ஆப்நகரம்

'நிவர்' போனது 'புரெவி' வருது..! மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்..!

மழை காலத்தில் பொதுமக்கள் கவனமாக இருக்க சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 28 Nov 2020, 6:22 pm
தமிழகத்தில் பருவ மழை மழை தொடங்கி கடந்த இரண்டு வாரங்களாக வட, தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. அதனை தொடர்ந்து வங்க கடலில் உருவான நிவர் புயல் தனது சக்திக்கு ஏற்றார் போல கடலூர், புதுச்சேரி, அரியலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை உலுக்கிவிட்டு சென்றது.
Samayam Tamil file  pic


இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறவும் வாய்ப்பு இருப்பதாக புயல் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அந்த புயல் தென் கிழக்கு வங்க‌க் கடலில் உருவாகி, தமிழகம் புதுச்சேரி நோக்கி நகரும் எனவும் அதனால் டிசம்பர் 1 முதல் தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மீண்டும் புயல் ஏற்பட்டால் அதற்கு ' புரெவி ' என அழைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. நிவர் புயல் கரையை கடந்து நான்கு நாட்கள் ஆன பிறகும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி: திட்டவட்டமாக தெரிவித்த கல்வி அமைச்சர்!

மாத்திரை, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வங்க முடியாமல் சிரமத்தில் இருப்பதாக முடிச்சூர் பகுதி மக்கள் வெள்ளத்தில் கண்ணீர் வடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பேட்டி அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், '' பொதுமக்கள் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அலட்சியமாக இருக்கக்கூடாது. மழைக்காலம் மிகவும் சவாலானது. மிக கவனமாக இருங்கள் என்று கூறினார்.

அடுத்த செய்தி