ஆப்நகரம்

நோட் பண்ணிக்கோங்க: டிச.2 அதி கன மழை பெய்யப் போகுது!

தமிழகத்தை நெருங்கி வருகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.

Samayam Tamil 29 Nov 2020, 10:27 am
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil tamil nadu rain


தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் டிசம்பர் 2ஆம் தேதி தென் தமிழக கடல் பகுதியை நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு அடுத்து வரும் குட் நியூஸ்!

வங்க கடலில் கடந்த 21ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிதான், தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிவர் புயலாக புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே 25ஆம் தேதி நள்ளிரவு கரையை கடந்தது. இந்த புயல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக நல்ல மழையை கொடுத்தது.

இந்நிலையில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தென் தமிழக கடற்கரையை நெருங்குவதால் தென் தமிழகத்தில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக சொன்னது, அமித் ஷா சொன்னாரா? ரஜினியை நம்பும் பாஜக!

காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி