ஆப்நகரம்

தென் மாவட்டங்களில் இன்றும் மழை நீடிக்கும்

இலங்கைக்கு அருகில் மையம் கொண்ட காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இதனால் கடந்த சில தினங்களாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது.

Samayam Tamil 15 Mar 2018, 9:27 am
இலங்கைக்கு அருகில் மையம் கொண்ட காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இதனால் கடந்த சில தினங்களாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது.
Samayam Tamil heavy rain continues in south tamil nadu districts
தென் மாவட்டங்களில் இன்றும் மழை நீடிக்கும்

தென் கிழக்கு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக சில இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. பாபநாசத்தில் 19, தூத்துக்குடியில் 20 மி.மீ மழை பெய்தது. கனமழை காரணமாக தூத்துக்குடியில் 7 வீடுகள் சேதமடைந்துள்ளன. தூத்துக்குடியில் இரயில் நிலையத்தில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியதால், ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

கடலில் பலத்த காற்று வீசுவதால் நேற்று 5வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

இன்றும் மிதமான மற்றும் கனமழை நீடிக்க அதிக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி