ஆப்நகரம்

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை!

சென்னையின் பல்வேறு பகுதியில் இரவில் பலத்த மழை பெய்துள்ளது.

TOI Contributor 18 Aug 2017, 2:51 am
சென்னை : சென்னையின் பல்வேறு பகுதியில் இரவில் பலத்த மழை பெய்துள்ளது.
Samayam Tamil heavy rain in chennai
சென்னையில் வெளுத்து வாங்கிய மழை!


தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், நேற்று இரவு சென்னையின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. ஏற்கனவே பெயத மழையால், தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதை அகற்ற வழி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.

தாழ்வான பகுதிகளில் இன்னும் மழை நீர் தேங்கியுள்ள நிலையில், நேற்று இரவு பெய்த கன மழையால் மேலும் அதிகமாக மழை நீர் தேங்கத் தொடங்கியுள்ளது.

அடுத்த செய்தி