ஆப்நகரம்

கோவை: கொரோனா நேரத்தில் கொட்டிய கன மழை!

கோவையில் பெய்த கனமழையால் விவசாயிகள் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.

Samayam Tamil 7 Apr 2020, 11:15 am
கோவை மாவட்டத்தில் நேற்று இரவு முதலே பல இடங்களில் மழை பெய்துள்ளது. கோவை மாவட்டம் நாதேகவுண்டர் புதூர் பகுதியில் இன்று அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை கனமழை கொட்டித் தீர்த்தது.
Samayam Tamil கொரோனா நேரத்தில் கொட்டிய கன மழை


இதனால் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. பல வீடுகளில் சுவர் இடிந்துள்ளது. நல் வாய்ப்பாக இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மழையால் அந்தப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஆடுகளும் அடித்துச் செல்லப்பட்டன.

நாமக்கல் ராசிபுரம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக 1300 வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை: கொரோனாவை வென்ற பத்து மாத குழந்தை!

ஏற்கெனவே கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு செயல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் விவசாயப் பணிகளுக்கு பிரச்சினை இல்லை என்று கூறப்பட்டிருந்தாலும் விவசாயப் பணிகளுக்கு ஆள்கள் கிடைப்பதிலும், அறுவடை செய்தவற்றை சந்தைகளுக்கு எடுத்துச் செல்வதில் வாகனங்கள் கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது.

வாழைகள் பெரும்பாலும் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் அதிலும் சிக்கல் நிலவுவதால் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். இந்த சூழ்நிலையில் கால்நடைகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டதும், வாழை உள்ளிட்ட மரங்கள் சாய்ந்ததும், குடியுருப்புப் பகுதிகள் சேதமடைந்திருப்பதும் மக்களை இன்னலுக்குள் தள்ளியுள்ளது.

இதனால் தமிழ்நாடு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி