ஆப்நகரம்

கோவை, நெல்லையில் மழை: குதூகலத்தில் மக்கள்

தமிழகம் முழவதும் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் கோவை, நெல்லை, நாமக்கல் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

TNN 7 May 2017, 3:22 am
தமிழகம் முழவதும் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் கோவை, நெல்லை, நாமக்கல் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கத்திரி வெயிலின் தாக்கத்தால் மக்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே தங்கும் சூழல் ஏற்பட்டது.
Samayam Tamil heavy rain in coimbatore namakkal district
கோவை, நெல்லையில் மழை: குதூகலத்தில் மக்கள்


கோவை மாவட்டம் துடியலுார் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கன மழை பெய்தது. கன மழை காரணமாக பொள்ளாச்சி, மேட்டுப்பளையம், கோவை துடியலுார் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இந்த காற்றினால் மேட்டுப்பாளையம், ஊட்டி மெயின் ரோடு கள்ளாறு ரயில்வே கேட் அருகே ஏராளமான மரங்கள் சாய்ந்தன. இதனால் மேட்டுபாளையம் - ஊட்டி சாலை துண்டிக்கப்பட்டது.

இதே போன்று நெல்லை மாவட்டம் தென்காசி, குற்றாலம், புளியரை, பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கன மழை பெய்தது. கடும் வறட்சி நிலவும் சூழ்நிலையில் மழை பெய்து வருவது அப்பகுதிவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

மேலும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி