ஆப்நகரம்

தமிழகத்தின் பல பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை!

தமிழகத்தின் பல பகுதிகளில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கோவை, திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Samayam Tamil 9 May 2018, 7:37 am
தமிழகத்தின் பல பகுதிகளில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கோவை, திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Samayam Tamil rains
தமிழகத்தின் பல பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை!


தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கிய நிலையில் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள், அலுவலகம் செல்பவர்கள் என அனைவரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக கோவை, திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களில் நேற்று இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கோவை நகரில் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், நேற்று மாலை இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. இதே போல் திருப்பூரில் பாரப்பாளையம், கூலிபாளையம், பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

சேலம் மற்றும் ஏற்காட்டில் இடி மின்னலுடன் பெய்த மழையால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நேற்று கனமழை பெய்தது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வெப்பச்சலனம் காரணமாக இடி மின்னலுடன் ஒரு மணி நேரம் கனத்த மழை பெய்தது. இதேபோன்று அவினாசி, விழுப்புரம், கரூர் மாவட்டங்களிலும் நேற்று பரவலாக மழை பெய்தது.

தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இடி மின்னலுடன் பெய்த மழையால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி