ஆப்நகரம்

தென் மாவட்டத்தில் அடித்து நொறுக்கும் கனமழை!

தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 21 Dec 2019, 9:06 am
வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி தமிழ்நாடு, புதுச்சேரியில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. சில தினங்களாக மழை அளவு சற்று குறைந்த நிலையில் இன்று தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்துவருகிறது.
Samayam Tamil தென் மாவட்டத்தில் அடித்து நொறுக்கும் கனமழை


சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

குமரி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

“கல்லூரி விடுமுறையால், அனைத்து தெருக்களும் போராட்டக் களமாகும்”

இந்நிலையில் கன்னியாகுமரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. சுற்றுலாத்தலங்களை பார்வையிட வந்தவர்கள் விடுதிகளிலேயே தங்கியிருந்தனர். விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

ஜெயலலிதா கல்வி வாழ்க்கையில் விழுந்த குறுக்கீடு!

தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரபட்டினம், உடன்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று (டிசம்பர் 20) மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. நாட்டுபடகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, பசும்பொன், அபிராமம் பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. ஏற்கெனவே அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி விவசாய நிலங்களை மழை நீர் சூழ்ந்த நிலையில் தற்போதும் கனமழை பெய்துவருகிறது.

இரட்டை குடியுரிமை குறித்து முதல்வருக்கு புரிதல் உள்ளதா? -மூத்த வழக்கறிஞர் கேள்வி!!

இதுதவிர பல இடங்களில் லேசானது முதல் மிதனமானது வரை மழை பெய்துவருகிறது.

அடுத்த செய்தி