ஆப்நகரம்

தஞ்சையில் சூறாவளிக்காற்றுடன் கனமழை: 50ஆண்டுகால பழமையான அரசமரம் சாய்ந்தது!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக 50 ஆண்டுகள் பழமையான அரசமரம் சாய்ந்தது.

Samayam Tamil 10 Jun 2018, 10:13 am
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக 50 ஆண்டுகள் பழமையான அரசமரம் சாய்ந்தது.
Samayam Tamil TreeMaintenancepart2
தஞ்சையில் சூறாவளிக்காற்றுடன் கனமழை: 50ஆண்டுகால பழமையான அரசமரம் சாய்ந்தது!


தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம், 2 மணியளவில், பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

நீதிமன்ற சாலையில், தாலுகாக அலுவலகம் முன் நின்ற, 50 ஆண்டு கால பழமைவாய்ந்த அரச மரம் சூறாவளிக் காற்றில் சிக்கி சாலையில் விழுந்தது. இதனால், சாலையின் இருபுறமும் இருந்த மின்சார கம்பிகள் அறுத்து, மின் கம்பங்கள் சாய்ந்தன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின் வாரிய ஊழியர்கள், மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால், பழைய கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம், தாலுகா அலுவலகம், காவலர் பயிற்சி பள்ளி உள்ளிட்ட இடங்களில், நான்கு மணி நேரத்திற்கு மேலாக, மின் தடை ஏற்பட்டது.

மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், அண்ணாதுரை சிலை அருகே, போலீசாரால் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள், காற்றில் பறந்து, வாகன ஓட்டிகளின் மீது விழுந்தது. இதனால் வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

அடுத்த செய்தி