ஆப்நகரம்

இன்று 12 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 6 Oct 2022, 1:33 pm
தமிழ்நாடு, புதுச்சேரிக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
Samayam Tamil rain tn


அந்த அறிவிப்பில், “தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (06.10.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

07.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழை எப்போது? சென்னைக்கு மழை எப்படி? தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!

08.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

09.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

10.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்
ரேஷன் கடைகளில் கேஸ் சிலிண்டர்: அசத்தல் திட்டம் சென்னையில் தொடக்கம்!
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை) தலா 7, கலவை AWS (ராணிப்பேட்டை), ஆரணி (திருவண்ணாமலை), செய்யார் (திருவண்ணாமலை), வேதாரண்யம் (நாகப்பட்டினம்) தலா 6, மரக்காணம் (விழுப்புரம்) 5, காட்பாடி (வேலூர்), செங்கல்பட்டு, வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), மேட்டூர் (சேலம்), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு), பாப்பாரப்பட்டி KVK (தர்மபுரி) தலா 4,

KVK காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), வந்தவாசி (திருவண்ணாமலை), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), திருத்தணி PTO (திருவள்ளூர்), சென்னை விமான நிலையம், மதுராந்தகம் (செங்கல்பட்டு), ஏற்காடு (சேலம்), தர்மபுரி PTO, செய்யூர் (செங்கல்பட்டு), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), வேலூர், பென்னாகரம் (தர்மபுரி), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), செம்பரம்பாக்கம் ARG (திருவள்ளூர்), பள்ளிக்கரணை ARG (சென்னை) தலா 3,

பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), ஒர்த்தநாடு (தஞ்சாவூர்), ஆற்காடு (ராணிப்பேட்டை), தர்மபுரி, பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), அம்முண்டி (வேலூர்), கோவில்பட்டி AWS (தூத்துக்குடி), திருத்தணி (திருவள்ளூர்), திண்டிவனம் (விழுப்புரம்), சேலம், பொன்னை அணை (வேலூர்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), MRC நகர் (சென்னை) தலா 2,

எட்டயபுரம் (தூத்துக்குடி), புதுச்சேரி, வால்பாறை PTO (கோவை), தாளவாடி (ஈரோடு), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), தாம்பரம் (செங்கல்பட்டு), சோளிங்கர் (ராணிப்பேட்டை), பொன்னேரி (திருவள்ளூர்), கீழ் கோதையர் ARG (கன்னியாகுமரி), சென்னை நுங்கம்பாக்கம், டேனிஷ்பேட்டை (சேலம்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), புழல் ARG (திருவள்ளூர்), அம்பத்தூர் (திருவள்ளூர்), வாலாஜா (ராணிப்பேட்டை), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), DGP அலுவலகம் (சென்னை), திருப்போரூர் (செங்கல்பட்டு), பெரம்பூர் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), ஓமலூர் (சேலம்), எடப்பாடி (சேலம்), வானூர் (விழுப்புரம்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), MGR நகர் (சென்னை), நந்தனம் ARG (சென்னை), ACS கல்லூரி (காஞ்சிபுரம்), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

06.10.2022: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

08.10.2022: தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

06.10.2022 முதல் 10.10.2022 வரை : குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி