ஆப்நகரம்

சென்னை முதல் கன்னியாகுமரி வரை பரவலாக மழை; மகிழ்ச்சியில் தமிழகம்..!!

சென்னை, திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை தமிழகத்தின் பரவலான மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.

Samayam Tamil 3 Jul 2018, 8:29 am
சென்னை, திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை தமிழகத்தின் பரவலான மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.
Samayam Tamil chennai-rains
தமிழகம் முழுவதும் பரவலாக மழை- மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்..!!


வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை தொடர்ந்து நேற்று தமிழகத்தில் பரவலான மழை எதிர்பார்க்கப்பட்டது. அதை தொடர்ந்து சென்னையில் மாலை முதல் மழை பெய்யத் தொடங்கியது.

அதன்படி சென்னையின் சூளைமேடு, தாம்பரம், அம்பத்தூர், போரூர், அரும்பாக்கம், வடபழநி போன்ற பகுதிகளில் மாலை முதல் பெய்ய தொடங்கியமழை, நள்ளிரவில் சூறைக்காற்றுடன் பெய்தது.

தொடர்ந்து, சோழிங்கநல்லூர், நெற்குன்றம், ராமாபுரம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது.

எனினும், கடந்த சில நாட்களாவே சென்னை உட்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்ட நிலையில், நேற்று பெய்த மழையால் இதமான வானிலை நிலவுகிறது.

சென்னையை தொடர்ந்து சேலம் மற்றும் திருச்சி மாவட்டங்களில் 2வது நாளாக கனமழை பெய்தது. இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் இரு மாவட்டங்களின் சாலையிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

கொடைக்கானல் கிராமப்பகுதிகளில் பெய்த மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காபி, மிளகு, ஏலக்காய் போன்ற பயிர் விளைச்சல் நல்ல பயன்பெறும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து புதுக்கோட்டை, ஈரோடு, தருமபுரி, தஞ்சாவூர், கன்னியாகுமரி ஆகிய தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்தது. இதனால் விவசாய மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்தாண்டு மழை பொழிவு அதிகமாக இருக்கும் என ஏற்கனவே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி