ஆப்நகரம்

இந்த ஆறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Samayam Tamil 14 Sep 2020, 6:18 pm
ஆந்திர கடற்கரை மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கிறது.
Samayam Tamil rain


இதன் காரணமாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஐந்து மாவட்டங்களில் அடித்து வெளுக்கப்போகும் மழை!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியே பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக, திருத்தணியில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் சின்னக்கல்லார், திருப்பத்தூர் ஆகிய இடங்களில் தலா 7 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.

Chennai Rains: தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கப் போகிறது? - வானிலை எச்சரிக்கை!

கடல் உயர்அலை முன்னறிவிப்பு: தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை இரவு (செப்.15) 11:30 மணி வரை கடல் உயர் அலை 3 மீட்டர் முதல் 3.4 மீட்டர் வரை எழும்பக்கூடும் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி