ஆப்நகரம்

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

சேலம், தருமபுரி, நீலகிரி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களி்ல் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 31 Aug 2020, 7:04 pm
தென்தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil heavy rain


அதேசமயம் சேலம், கரூர், தருமபுரி, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு ஆகிய 12 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன்கூடிய கனமழையும் பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை கொட்டித் தீர்க்கப் போகுதாம்!!

கடந்த 24 மணிநேரத்தில் தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயகோட்டை ஆகிய இடங்களில் தலா 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரம், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஆகிய இடங்களில் தலா 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

அடுத்த செய்தி