ஆப்நகரம்

தென்கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை: 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தென் கடலோர மாவட்டங்களில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் தென் தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

TNN 30 Nov 2017, 10:13 am
தென் கடலோர மாவட்டங்களில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் தென் தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil heavy wind in tirunelveli kanyakumari and tuticorin from wednesday night
தென்கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை: 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!


வடக்கிழக்குப் பருவமழை காரணமாக தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நவம்பர் மாதத்தின் தொடக்கத்திலிருந்தே தென் கடலோர மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு இருந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று மாலை முதல் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

காலை முதலே பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர்.

இதனால், இன்று நடைபெறுவதாக இருந்த பல்கலைக்கழகத் தேர்வுகளை திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது. மேலும் திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி