ஆப்நகரம்

சட்டப்பேரவை முற்றுகைக்கு உயர் நீதிமன்றம் தடை... தமிழக உள்துறை பதிலளிக்க உத்தரவு

வண்ணாரப்பேட்டை சி.ஏ.ஏ. போராட்டம் தொடர்பாக இதுவரை 12 எஃப்.ஐ.ஆர். கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அமைதியாகப் போராட்டங்கள் நடத்த 13 இடங்கள் சென்னையில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், சட்டப்பேரவையை முற்றுகை என்பது சட்டவிரோதம் அதற்கு காவல்துறை அனுமதிக்காது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Samayam Tamil 18 Feb 2020, 6:59 pm
சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர் என மத்திய அரசின் அறிவிப்புகளுக்கு எதிர்ப்புக் குரல் நாடு முழுக்க எழுந்து வரும் நிலையில், சென்னை சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Samayam Tamil hc


சென்னை வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதைத் தொடர்ந்த் தமிழ்நாடு முழுக்க போராட்டக்களமாக மாறியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் மார்ச் மாதம் 11ஆம் தேதி வரை தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த வாராகி என்பவர் தொடர்ந்த இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

சுவர் காதலர் ட்ரம்ப் இந்தியா வருகை... குஜராத் மாடலை மறைக்கும் 'தீண்டாமை' சுவர்!

என்.ஆர்.சி., என்.பி.ஆர். உள்ளிட்ட நடைமுறைகளுக்கும், சி.ஏ.ஏ. சட்டங்களுக்கும் ஆதரவு அளிக்க மாட்டோம் என்று தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி நாளை (18.02.2020) தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த முற்றுகைப் போராட்டங்கள் நடத்த அனுமதி கோரி அளிக்கப்பட்ட மனுவை காவல்துறை நிராகரித்துள்ளது. மேலும், வண்ணாரப்பேட்டை சி.ஏ.ஏ. போராட்டம் தொடர்பாக இதுவரை 12 எஃப்.ஐ.ஆர். கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அமைதியாகப் போராட்டங்கள் நடத்த 13 இடங்கள் சென்னையில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், சட்டப்பேரவையை முற்றுகை என்பது சட்டவிரோதம் அதற்கு காவல்துறை அனுமதிக்காது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Mohan Bhagwat: அப்படியும் பேசுவோம், இப்படியும் பேசுவோம்... மணமுறிவு குறித்து மாற்றி மாற்றி பேசும் ஆர்.எஸ்.எஸ்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றூம் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு இதனை ஏற்று, தமிழக உள்துறை, காவல்துறை டிஜிபி மற்றும் சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஆகியோர் மார்ச் 11 ம் தேதி பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், அதுவரை போராட்டம் நடத்த அனுமதியில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி