ஆப்நகரம்

மீனவர்கள் துப்பாக்கிச்சூட்டில் உரிய விசாரணை; மத்திய அரசு நிவாரணம்; உயர்நீதிமன்றம் ஆணை!

மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, உரிய விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 17 Nov 2017, 5:20 pm
சென்னை: மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, உரிய விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil high court orders enquiry about fishermen issue
மீனவர்கள் துப்பாக்கிச்சூட்டில் உரிய விசாரணை; மத்திய அரசு நிவாரணம்; உயர்நீதிமன்றம் ஆணை!


கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இந்திய கடலோர காவல்படை மீனவர்களை தாக்கினர். துப்பாக்கிச்சூடு நடத்தி, படகுகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கடலோர காவல்படை உயர் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து மீனவர்கள் உடன் நடத்திய பேச்சுவார்த்தையில், கடலோர காவல்படை சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக மீனவ நல அமைப்பை சேர்ந்த பீட்டர் ராயன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வலியுறுத்தினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக டிஎஸ்பிக்கு குறையாத காவல் அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மேலும் காயமடைந்த மீனவர்களுக்கு, மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

High Court orders enquiry about fishermen issue.

அடுத்த செய்தி