ஆப்நகரம்

தமிழகத்தின் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும்- சென்னை வானிலை மையம்!

தமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 21 Apr 2018, 2:36 pm
தமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது.
Samayam Tamil pic (2)
தமிழகத்தின் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும்- சென்னை வானிலை மையம்!


இதுகுறித்து சென்னை வானிலை மைய ஆய்வு இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் கூறியன பின்வருமாறு: வெப்பச்சலனம் காரணமாக உள்தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் ஆந்திராவில் வீசும் வெப்பக்காற்றை பொறுத்து தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

மேலும் இந்திய அளவில் கடந்தாண்டைவிட இந்த ஆண்டு 90% அளவுக்கு மழை இருக்கும். இவ்வாறு சென்னை வானிலை மைய ஆய்வு இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இந்த நிலையில் கன்னியாகுமரி, ராமநாதபுரம் கடற்பகுதியில் இன்று கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்திய கடல்சார் மையம் கொடுத்துள்ள தகவலின்படி, கன்னியாகுமரி-ராமநாதபுரம் கடல் பகுதிகளில் உள்ளவர்கள் இன்று முதல் நாளை இரவு பதினொன்றரை மணி வரை எச்சரிக்கையாக இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.

அதேபோல் மீனவர்களும், கடலோரப் பகுதியில் உள்ள மக்களும் நாளையும், நாளை மறுதினமும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளை தடுப்பதற்காக ஏராளமான போலீசார் கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி