ஆப்நகரம்

தமிழகத்தில் சமஸ்கிருதம், இந்தி திணிப்பு அனுமதிக்கப்படாது: அமைச்சர்கள் உறுதி

தமிழகத்தில் சமஸ்கிருதம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளின் திணிப்பு எந்த விதத்திலும் நடைபெற அனுமதிக்கமாட்டோம் என, தமிழக அமைச்சர்கள் அன்பழகன் மற்றும் பெஞ்சமின் உறுதி அளித்துள்ளனர்.

TNN 9 Aug 2016, 2:19 pm
தமிழகத்தில் சமஸ்கிருதம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளின் திணிப்பு எந்த விதத்திலும் நடைபெற அனுமதிக்கமாட்டோம் என, தமிழக அமைச்சர்கள் அன்பழகன் மற்றும் பெஞ்சமின் உறுதி அளித்துள்ளனர்.
Samayam Tamil hindi sanskrit supremacy wont allowed in tamil nadu ministers promises
தமிழகத்தில் சமஸ்கிருதம், இந்தி திணிப்பு அனுமதிக்கப்படாது: அமைச்சர்கள் உறுதி

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய நாளில், மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில், இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை திணிக்கும் முயற்சிகள் நடைபெற்றுவருவதாக, திமுக உறுப்பினர்கள் சந்தேகம் எழுப்பினர். இதுதொடர்பாக, தமிழக அரசு தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதன்பேரில், பள்ளிக்கல்வி அமைச்சர் பெஞ்சமின் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். அதில், தமிழகத்தில் சமஸ்கிருதம், இந்தி போன்ற மொழிகளின் எந்த விதமான திணிப்பும் அனுமதிக்கப்படாது என்றும், கல்வி நிறுவனங்களில் தமிழ் முதன்மை மொழியாக தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தமிழகத்தில் வசிக்கும் சிறுபான்மையினர் நலன் காக்கப்படும் என்றும் அமைச்சர்கள் உறுதி அளித்தனர். இது மட்டுமின்றி, புதிய கல்விக் கொள்கை வரைவின் சில உள்ளீடுகளை மட்டும் மத்திய அரசு அனுப்பியுள்ளதாகவும், இதுபற்றி பரிசீலனை செய்துவருவதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி