ஆப்நகரம்

சுற்றுச்சூழலை காக்க உயிர்விட்ட அனைவரின் தியாகத்தையும் வரலாறு பேசும்; நடிகர் கார்த்தி!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து, நடிகர் கார்த்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 May 2018, 2:44 pm
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து, நடிகர் கார்த்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Actor Karthi


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அமைதி வழியில் போராடிய அப்பாவி பொது மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, 10க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பது தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

போராடிய மக்களுக்கு, அரசும் அதிகாரிகளும் உறுதுணையாகத் தான் நின்றிருக்க வேண்டும். மக்களைக் காப்பதுதானே காவல்துறையின் முதல் கடமை.

அப்படியிருக்க, காவல்துறையினரே 10க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களைக் குருவி சுடுவதுபோல் சுட்டு வீழ்த்தி இருப்பது எந்தவிதத்தில் நியாயம்?

மண்ணுக்கும் மக்களுக்குமான போராட்டத்தில் உயிர்விட்ட ஒவ்வொருவருக்கும் என் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

சுற்றுச்சூழலைக் காக்க உயிர்விட்ட அத்தனை பேரையும் அவர்களுடைய தியாகத்தையும் நாளைய வரலாறு கல்வெட்டுக் கணக்காக நினைவில் வைத்திருக்கும் என்று நடிகர் கார்த்தி குறிப்பிட்டுள்ளார்.

History will speak about Thoothukudi shooting death says Actor Karthi.

அடுத்த செய்தி