ஆப்நகரம்

புயல், கனமழை: தமிழகத்தில் நாளை ஆறு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை

புரேவி புயல் காரணமாக நாளை தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களுக்கு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 3 Dec 2020, 7:47 pm
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த புரேவி புயல் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை வடக்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ளது. பின்னர் படி படியாக கன்னியாகுமரியில் இருந்து வட கிழக்கே 310 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொடுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்


இதன் காரணமாக தஞ்சாவூர்,புதுக்கோட்டை,சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை காலை புரேவி புயல் கடக்கவுள்ளதால் ஆறு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது, '' வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ''புரேவி புயல்'' இன்று (3.12.2020) மன்னர் வளைகுடா பகுதியில் பாம்பனுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. இப்புயல், 4ஆம் நாளை அதிகாலையில் பாம்பன் - கன்னியாகுமரிக்கு இடையே, தென்தமிழக கடற்கரையை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஜினியுடன் அதிமுக கூட்டணியா? ஓபிஎஸ் சொல்வது என்ன!

அவ்வாறு புயல் கடக்கும் போது, பெரும் மழைக்கும், புயல் காற்றுக்கு வாய்ப்புகள் உள்ளன என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை 4 ஆம் தேதி அரசு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதற்கு ஈடாக 2021 ஜனவரி மாதத்தில் ஒரு சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் செயல்படும். மேற்கண்ட மாவட்டங்களில், அத்தியாவசிய பணிகள் தவிர, பிற பணிகளுக்கு பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்'' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி