ஆப்நகரம்

மிக கனமழை: இன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக இன்று தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 18 Nov 2021, 8:01 am
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வருகிறது.
Samayam Tamil tn schools holiday today


தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
வெள்ளம் நிவாரணம் ரூ.10,000: தமிழக அரசு அறிவிப்பு எப்போது?
இந்நிலையில் இன்று (நவம்பர் 18) பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தர்மபுரி, கடலூர், தஞ்சாவூர்,புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அடுத்த ரெய்டு ஓபிஎஸ் வீட்டிலா? 500 கோடி ரூ ஊழல் புகார்!
திருவாரூர், சேலம், காஞ்சிபுரம், நெல்லை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி