ஆப்நகரம்

தமிழகத்தில் கொரோனா: தற்போதையை நிலவரம் என்ன?

கொரோனா வைரஸ் தாக்கமானது உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உயிர்களை காவு வாங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் தற்போதைய நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம்.

Samayam Tamil 21 Mar 2020, 4:36 pm
இந்திய நிலவரம்:
Samayam Tamil தமிழகத்தில் கொரோனா தற்போதையை நிலவரம் என்ன


கொரோனா வைரஸ் என்று அழைக்கப்படும் கோவிட்-19 வைரஸ் தொற்றினால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. பல்வேறு நாடுகளின் மருத்துவ குழு தீவிரமாக செயல்பட்டு 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளை குணப்படுத்தி வீட்டு அனுப்பி வைத்துள்ளது.

துரதிர்ஷ்டவசமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலனோர் முதியவராவர். இந்தியாவில் உயிரிழந்த 5 பேரும் முதியர்வர்கள்தான். நமது நாட்டில் தற்போது வரை 298 பேர் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் எத்தனை?

மற்ற மாநிலங்களை ஒப்பீடுகையில் தமிழத்தில் கொரோனாவின் தாக்கமானது கட்டுப்பாட்டினுள் இருக்கிறது.3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒருவர் குணமாகி விட்டதாக மாநில சுகாதாரத்துறை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மூன்று பேரும் வெளி நாடுகளிலிருந்து கொரோனா அறிகுறிகளுடன் வந்தவர்களே தவிர இங்கிருப்பவர்கள் தொற்றினால் பாதிக்கப்படவில்லை.

முக்கிய அறிவிப்பு: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு..!

எண்ணிக்கை:

இன்றைய (21.3.2020) நிலவரப்படி விமான நிலையம், ரயில் நிலையம் போன்ற போக்குவரத்து நிலையங்களில் மொத்தம் 201672 பயணிகளிடம் கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் சந்தேகிக்கப்பட்ட நிலையில் 8950 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். காய்ச்சலுடன் 54 பேர் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று இருக்கலாம் என்ற அடிப்படியில் காய்ச்சல் உள்ள 412 பேருடைய ரத்த, சளி மாதிரிகள் ஆய்வகங்களில் சோதனை செய்யப்பட்டுவிட்டது. அதில் இந்த நாளில் வரை 3 பேருக்கு பாசிட்டிவ் என கண்டறியப்பட்டுள்ளது. 339 பேருக்கு நெகட்டிவ். 70 பேருடைய ரிசல்ட் இன்னும் வரவில்லை.

ஆய்வகங்கள்:

கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் நடந்து வருகிறது. கூடுதலாக மதுரை, கோவை மற்றும் நெல்லையில் உள்ள அரசு மருத்துவனைகளில் ஆய்வகங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி