ஆப்நகரம்

இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவை? பேனர் பலி விஷயத்தில் உயர் நீதிமன்றம் கேள்வி!

சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் பலியான சம்பவத்தில், உயர் நீதிமன்றம் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

Samayam Tamil 13 Sep 2019, 12:26 pm
டிஜிட்டல் பேனர் வைக்கும் விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுகளை முறையாக செயல்படுத்தவில்லை என்று தமிழக அரசு மீது டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
Samayam Tamil Chennai HC


அப்போது, சென்னை குரோம்பேட்டையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவம் குறித்து நீதிபதிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். அதாவது, இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் சிந்த வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

அதிகாரிகள் ஏன் இப்படி செய்கிறீர்கள்? பேனர் பலிக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!

சுபஸ்ரீயின் இத்தனை ஆண்டுகால வளர்ச்சிக்கு அவரது பெற்றோர் மட்டுமல்ல. சமுதாயத்தின் பங்கும் உள்ளது. நாட்டில் பொதுமக்களின் உயிருக்கு ஒரு சதவீத மதிப்பு கூட இல்லை.

அரசியல் கட்சியினரின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைத்தால் மட்டும் தான் விருந்தினர்கள் வருவார்களா? மெரினா கடற்கரை சாலையில் உள்ள நடைபாதையை சேதப்படுத்தி, ஆளும் கட்சியின் கொடி வைக்க யார் அனுமதி கொடுத்தது?

இளம்பெண் உயிரை பறித்த பேனர்- வசமாக சிக்கிய முன்னாள் கவுன்சிலர், அச்சகம்!

குற்றம் நடக்க அனுமதித்துவிட்டு, பின்னர் குற்றவாளிகள் பின்னால் ஓடுவதையே அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. பேனர் வைக்கக் கூடாது என்று தனது கட்சியினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட ஏன் வெளிப்படையாக தெரிவிக்காமல் இருக்கிறார்? என்று அக்கட்சியின் வழக்கறிஞர் கண்ணதாசனிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஒரு வேலை தெரிவித்து இருந்தாலும், அதை ஏன் மக்களிடம் கொண்டு செல்லவில்லை? கடற்கரை சாலையில் உள்ள அனைத்து கொடிகளையும் உடனே அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உயிர் பலி வாங்கும் பேனர் கலாச்சாரம்; இதுக்கு ஒரு முடிவே இல்லையா? கொதிக்கும் மக்கள்!

அடுத்த செய்தி